தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் மோகன்லால் : கனவிலும் நினைக்கவில்லை என நெகிழ்ச்சி | தேசிய விருது பெற்றனர் ஷாரூக்கான், ராணி முகர்ஜி, எம்எஸ் பாஸ்கர், ஜிவி பிரகாஷ், ஊர்வசி | இட்லி கடை படத்திற்கு தணிக்கை குழு ‛யு' சான்றிதழ் | 100 கோடி லாபத்தில் 'லோகா' | ஹிந்தியில் அறிமுகமாகும் அர்ஜுன் தாஸ் | சர்தார் 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | துருவ் விக்ரமுக்கு வாழ்த்து சொன்ன அனுபமா பரமேஸ்வரன் | மீண்டும் படம் இயக்கும் தம்பி ராமையா மகன் உமாபதி | தாய்மையை அறிவித்த கத்ரினா கைப் | 'காந்தா சாப்டர் 1 டிரைலர்' : கன்னடத்தை விட ஹிந்தியில் அதிக வரவேற்பு |
கற்றது தமிழ் படத்தில் தமிழுக்கு வந்த அஞ்சலி, அதன்பிறகு அங்காடித்தெரு, மங்காத்தா, தரமணி, கேம் சேஞ்சர், மத கஜ ராஜா என பல படங்களில் நடித்தார். தற்போது பறந்து போ, ஈகை போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபகாலமாக கதாநாயகி மட்டுமின்றி முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களிலும் நடிக்கத் தொடங்கி இருக்கும் அஞ்சலி, சில படங்களில் சிங்கிள் பாடலுக்கும் நடனமாடி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று அஞ்சலி தன்னுடைய 39வது பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார். அப்போது தனது செல்ல நாய்க்குட்டியை கட்டிப்பிடித்தபடி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களையும் இணையப்பக்கத்தில் வெளியிட்டுள்ள அஞ்சலிக்கு, சினிமா துறையினரும், ரசிகர்களும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.