டிக்கெட் கட்டணங்களை அதிரடியாகக் குறைத்த கர்நாடகா அரசு | சமூக வலைத்தளங்களை விட்டு வெளியேறிய ஐஸ்வர்ய லட்சுமி | பிரச்சனை முடிந்து திரைக்கு வந்தது 'தணல்' | ‛ஜனநாயகன்' படத்திற்கு செக் வைக்க வரும் ‛பராசக்தி' | கமல் படத்தில் இணைந்த பிரபல மலையாள எழுத்தாளர் | வட சென்னை பெண்ணாக சாய் பல்லவி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் காஞ்சனா 4 | அறிவிக்கப்பட்டவை 10... வந்தவை 7 : இன்றைய நிலவரம் | ஓடாமல் போன 'காட்டி' : அனுஷ்காவின் திடீர் முடிவு | இரண்டாவது வாரத்தில் 'மதராஸி', லாபம் கிடைக்குமா ? |
சாந்தனு பாக்யராஜ் தொடர்ந்து முன்னணி ஹீரோவாக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள போராடி வருகிறார். மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்படுத்திய 'ராவண கோட்டம்' படம் அதை பூர்த்தி செய்யவில்லை. அடுத்து அவர் நடித்த 'ப்ளூ ஸ்டார்' படம் ஓரளவுக்கு அவரை தாக்கு பிடிக்க வைத்தது. இந்த நிலையில் அவர் புதிதாக நடிக்கும் படம் 'மெஜந்தா'. இதில் அவரது ஜோடியாக அஞ்சலி நாயர் நடிக்கிறார். இவர்களுடன் படவா கோபி, ஆர்.ஜே.ஆனந்தி, பக்ஸ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
பிராண்ட் பிளிட்ஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் டாக்டர் ஜேபி லீலாராம், ரேகா லீலாராம் மற்றும் ராஜு தயாரிக்கிறார்கள். பரத் மோகன் இயக்குகிறார். பல்லு ஒளிப்பதிவு செய்கிறார், தரண் குமார் இசையமைக்கிறார். இந்த படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கியது.
படம் பற்றி இயக்குனர் பரத் மோகன் கூறியதாவது: காதல், நகைச்சுவை மற்றும் விஷூவலாக நிச்சயம் இருக்கும். அழகான சினிமாட்டிக் பீல்-குட் எண்டர்டெயினர் கதையாக இந்தப் படம் பார்வையாளர்களுக்கு இருக்கும். அவள் சூரிய உதயம், என்றால் அவன் அந்தி சாயும் நேரம். இருவரும் ஒருபோதும் சந்திக்க விரும்ப மாட்டார்கள். ஆனால், பிரபஞ்சம் அந்த நிழலை ஒரே புள்ளியில் இணைக்கிறது' என்ற தீம்தான் இந்தப் படம். என்றார்.