ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

மகாராஜா படத்தின் வெற்றிக்கு பிறகு ட்ரெயின், ஏஸ், பாண்டிராஜ் இயக்கும் படம் என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. அடுத்து தெலுங்கில் பூரி ஜெகநாத் இயக்கும் படத்திலும் அவர் நடிக்கப் போகிறார் என்று ஒரு செய்தி சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், நெட்டிசன் ஒருவர் வெளியிட்ட பதிவில், சமீபகாலமாக பூரி ஜெகநாத் எந்த ஹிட் படத்தையும் கொடுக்கவில்லை. மகாராஜா படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் சேதுபதி புத்திசாலித்தனமாக படங்களை தேர்வு செய்வார் என்று நினைத்தால், இது போன்று தோல்வி பட இயக்குனர்களின் படங்களை தேர்வு செய்கிறாரே என்று அந்த நெட்டிசன் பதிவு போட்டுள்ளார்.
இதையடுத்து அதற்கு விஜய் சேதுபதி தரப்பில் எந்தவித பதிலும் கொடுக்காத நிலையில், நடிகர் சாந்தனு எக்ஸ் பக்கத்தில் அந்த நெட்டிசனுக்கு ஒரு பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், யாரைப் பற்றியும் இதுபோன்று அவதூறாக பேச வேண்டாம். பொது வெளிவில் வார்த்தைகளை கவனவாக பேசுங்கள். பூரி ஜெகநாத் என்பவர் பிரபல தயாரிப்பாளர், இயக்குனர். மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை யாராக இருந்தாலும் கொடுக்க வேண்டும். சகட்டுமேனிக்கு யாரையும் விமர்சனம் செய்யாதீர்கள் என்று பதிவிட்டுள்ளார் சாந்தனு.