சீதா மாதாவின் ஆசீர்வாதம் : சாய் பல்லவி மகிழ்ச்சி | பாலிவுட்டில் தென்னிந்திய நடிகர்களுக்கு மரியாதை இல்லையா : பிரியாமணி பதில் | 'பாபநாசம்' படத்தில் என் முதல் சாய்ஸ் ரஜினிதான்: ஜீத்து ஜோசப் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் |
தமிழ் நடிகர்களிலேயே அதிக அளவில் நட்புக்காக பல படங்களில், சில நிமிடங்கள் மட்டுமல்ல, சில நொடிகள் கூட வந்து போகும் கதாபாத்திரங்களில் தயங்காமல் நடித்து கொடுப்பவர் விஜய் சேதுபதி. சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியான தொடரும் திரைப்படத்தில் வெறுமனே சுவரில் தொங்கவிடப்பட்டுள்ள போட்டோவில் தெரியும் புகைப்படமாக மட்டுமே சில காட்சிகளில் நட்புக்காக நடித்தார் விஜய் சேதுபதி.
தொடரும் படம் பார்த்த பலருக்கும் விஜய் சேதுபதியின் இந்த சிறப்பு தோற்றம் மற்றும் இந்த படத்தில் சில காட்சிகளில் நடித்த பாரதிராஜா, நடிகர் இளவரசு ஆகியோரின் வருகை ஆச்சரியத்தையும் சந்தோஷத்தையும் அளித்திருக்கும். இந்த படத்தில் ஷோபனாவுக்கு ஜோடி என்கிற விதமாகத்தான் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருந்தது. படத்தில் பாரதிராஜா என்கிற ஸ்டன்ட் மாஸ்டரிடம் உதவியாளர்களாக மோகன்லாலும், விஜய்சேதுபதியும் பணிபுரியும் போது நட்பாக இருக்கிறார்கள் என்றும் விஜய்சேதுபதியின் மரணத்திற்கு பிறகு ஷோபனாவை மோகன்லால் மறுமணம் செய்து கொண்டு கேரளாவிற்கு அழைத்து செல்கிறார் என்றும் கதை அமைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் மோகன்லால் இந்த படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில் இளம் பருவ மோகன்லால் உடலில் ரோப் கட்டி சண்டை காட்சிக்கு தயாராவது போலவும் அதை விஜய் சேதுபதி அவருக்கு கட்டி விடுவது போலவும் அருகில் பாரதிராஜா நின்று மேற்பார்வை பார்ப்பது போலவும் இடம் பெற்றுள்ளது. இதில் விஜய்சேதுபதி தவிர பாரதிராஜா மற்றும் மோகன்லால் ஆகியோரின் இளம் உருவங்கள் ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது என்றே தெரிகிறது. இந்த புகைப்படத்தை தானும் பகிர்ந்து கொண்டுள்ள விஜய்சேதுபதி, “மாமனிதர் மோகன்லாலுடன் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி” என்று கூறியுள்ளார்.