ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் பட ரிலீஸ் எப்போது? | எங்களை பிரித்தது அந்த மூன்றாவது நபரே : கெனிஷாவை சாடும் ஆர்த்தி ரவி | ஹிந்தி பட ரீமேக்கில் நடிக்கும் துருவ் விக்ரம் | சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய சூரி | அமெரிக்காவில் தெலுங்கு கலாச்சார விழாவில் பங்கேற்கும் அல்லு அர்ஜுன் | ''எல்லாமே முதன்முறை... பிகினியும் கூட...'': 'வார் 2' பற்றி கியாரா அத்வானி | மணிரத்னம் படத்தில் ருக்மணி வசந்த் | ஆதி படத்தில் இணையும் மிஷ்கின்? | மே 23ம் தேதியிலும் அதிகப் படங்கள் ரிலீஸ் | வழக்கமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை : பிக்பாஸ் அர்ச்சனா |
ஆஸ்கர் மற்றும் கேன்ஸ் போன்ற சர்வதேச திரைப்பட திருவிழாக்களில் தங்கள் படங்கள் இடம் பெறுவதை பெருமையாக நினைப்பவர்கள் ஒரு பக்கம் என்றால், அந்த விழாவில் கலந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தால் அதுவே பெரிய பாக்கியம் என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள். அந்த வகையில் கன்னட நடிகையான திஷா மதன் என்பவர் தற்போது நடைபெற்று வரும் 75வது கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றுள்ளார். அங்கே ரெட் கார்பட் வரவேற்பில் இவர் காஞ்சிபுரம் சேலை அணிந்து அதேசமயம் மாடர்னாக வலம் வந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இது குறித்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்திலும் இவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்த காஞ்சிபுரம் சேலையை செட்டிநாடு பகுதியைச் சேர்ந்த நான்கு நெசவாளர்கள் கிட்டத்தட்ட 400 மணிநேரம் வேலை செய்து கை வேலைப்பாட்டில் உருவாக்கினார்களாம். இதற்காக 1950களில் செட்டிநாடு வீட்டு திருமணத்தில் மணப்பெண்ணுக்கு உருவாக்கப்படும் திருமண பட்டுச் சேலையின் வடிவமைப்பில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த திஷா மதன் 2020ல் வெளியான பிரெஞ்ச் பிரியாணி என்கிற ஒரே ஒரு படத்தில் நடித்துள்ளார். இதுதவிர வெப் சீரிஸ் ஒன்றில் நடித்துள்ளார். அவ்வளவுதான் இவருக்கு கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள எப்படி வாய்ப்பு கிடைத்தது என கன்னட திரையுலகை சேர்ந்தவர்கள் ஆச்சரியத்தில் இருக்கிறார்கள்.