ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

தமிழ் சினிமாவில் தனி கதாநாயகியாக வெற்றி பெறுவதென்பது சாதாரண விஷயமல்ல. மலையாள சினிமாவில் 'லோகா' படம் மூலம் புதிய வசூல் சாதனையே படைத்துவிட்டார் கல்யாணி பிரியதர்ஷன். இத்தனைக்கும் மற்ற மலையாள கதாநாயகிகளை விடவும் சில இடங்கள் பின் தங்கி இருந்தவர் அவர்.
தமிழில் நயன்தாரா, த்ரிஷா ஆகியோர் கூட தனி கதாநாயகியாக தனி முத்திரை எல்லாம் பதிக்கவில்லை. நயன்தாரா நடித்து 2017ல் வெளிவந்த 'அறம், கோலமாவு கோகிலா' படங்கள் மட்டும்தான் அவரது தனி கதாநாயகியர் படங்களில் வரவேற்பைப் பெற்றது. அதன்பின் வந்த 'ஐரா, கொலையுதிர் காலம், நெற்றிக்கண், ஓ 2, அன்னபூரணி' ஆகிய படங்கள் ஓடவேயில்லை. 'மூக்குத்தி அம்மன்' படம் மட்டும் ரசிக்க வைத்தது. அதில் ஆர்ஜே பாலாஜியின் நகைச்சுவை நடிப்பிற்கும் பங்குண்டு.
த்ரிஷா நடித்து வெளிவந்த தனி கதாநாயகி படங்களான, “நாயகி, மோகினி, ராங்கி, த ரோடு” ஆகிய படங்கள் வந்ததும் தெரியாது, போனதும் தெரியாது. அவர் தனி கதாநாயகியாக நடித்து முடித்த 'கர்ஜனை' படம் முடிந்து சில வருடங்களாக முடங்கியே உள்ளது. வெளியீட்டுத் தேதி அறிவித்த பின்பும் வெளியாகவில்லை.
கீர்த்தி சுரேஷ் தனி கதாநாயகியாக நடித்து வந்த தமிழ்ப் படங்களில், ஓடிடியில் வெளியான 'பெண்குயின்,' தியேட்டர்களில் வெளியான 'ரகு தாத்தா' இரண்டுமே வரவேற்பைப் பெறவில்லை. இன்று வெளியாகி உள்ள 'ரிவால்வர் ரீட்டா' படத்திற்கும் எதிர்பார்த்த அளவு வரவேற்பு இல்லை.
'லோகா' மூலம் கல்யாணி பிரியதர்ஷன் தந்த ஒரு வெற்றியை நயன்தாரா, த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் போன்ற முன்னணி நடிகைகள் தருவார்களா என்பதும் பெரிய கேள்விதான்.