ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
தமிழ் திரையுலகில் வாரிசு நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் இயக்குனரும், நடிகருமான பாக்யராஜின் மகன் சாந்தனு. இவர் சிறு வயதிலேயே இருந்தே சினிமாவில் நடித்து வந்தார். பின்னர் கதாநாயகனாக மாறினாலும் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போராடி வருகிறார். இந்த நிலையில் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு சாந்தனுவிற்கும், கீர்த்திக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இன்னும் குழந்தை செல்வம் கிடைக்கவில்லை. பலரும் சாந்தனுவின் யு-டியூப் சேனலில் இது குறித்து தங்களது கவலைகளையும் ஆதங்கங்களையும் கேள்விகளாக கேட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் சாந்தனு வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், “எப்போது குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறீர்கள் என பலரும் கேட்டு வருகிறீர்கள் ? நாங்கள் தயார். ஆனால் அதை நீங்கள் வளர்க்க போகிறீர்களா? இல்லையே.. இப்படி கேட்பதால் என்னை முரட்டுத்தனமானவன் என நினைக்க வேண்டாம். இது எங்களுடைய வலி. இதுபோன்று தொடர் கேள்விகள் எங்களுக்கு மன அழுத்தத்தை கொடுக்கின்றன. கடவுள் எப்போது குழந்தை கொடுக்க வேண்டும் என சரியான நேரத்தை தீர்மானித்து இருப்பார்” என்று பதிலடி தரும் விதமாக கூறியுள்ளார்.