ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
சில வருடங்களாகவே தமிழ் திரைப்படங்களின் தலைப்புகளில் மட்டுமல்ல பாடல்களில் கூட ஆங்கில வார்த்தைகளின் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கிறது. இது தமிழ் உணர்வாளர்களை மட்டும் சங்கடப்படுத்தவில்லை, தொடர்ந்து தமிழ் திரைப்படங்களை சிலாகித்து பாராட்டி வரும் பாலிவுட் இயக்குனரான அனுராக் காஷ்யப்புக்கு கூட வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை இயக்கி வரும் மணிரத்னம், தக் லைப் என டைட்டில் வைத்ததும் அந்த படத்தின் பாடல்களில் ஆங்கில சொற்கள் அதிகம் இடம் பிடித்திருப்பதும் குறித்து சமீபத்தில் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
சமீபத்தில் நடைபெற்ற தக் லைப் பட புரமோஷன் நிகழ்ச்சியில் மணிரத்னத்திடம் இதுகுறித்து கேட்கப்பட்டபோது, “என்னுடைய பல படங்களின் டைட்டில்கள் தமிழிலேயே இருந்திருக்கின்றன. ஆனால் அது ஒன்றும் ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. விதிகள் சொல்வது படி தான் போக வேண்டும் என்று அவசியம் இல்லை. இது அனைவருக்குமான மீடியம் என்று நான் நினைக்கிறேன். அது சரியாக இருந்தால் அதன்படி நீங்கள் போகலாம். ஏன் ஒரு தவறான இலக்கணத்துக்குள்ளையே உங்களை அடைத்துக் கொள்கிறீர்கள். ? சில நேரங்களில் சுகர் பேபி போன்ற பாடல் உங்களுக்கு தேவைப்படும். அது சரியானதாக நீங்கள் உணர்ந்தால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள். எப்போதுமே ஒரு வழி மட்டுமே இல்லை.. இன்னொன்றும் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.