'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் | திரவுபதி 2: ரிச்சர்ட்சின் 'வீர சிம்ஹா கடவராயன்' தோற்றம் வெளியீடு | இளம் வயது தோற்றத்தில் கிஷோர் |
‛நாயகன்' படத்தை அடுத்து 38 ஆண்டுகளுக்குப் பிறகு கமலும் மணிரத்னமும் இணைந்துள்ள படம் ‛தக்லைப்'. இப்படத்தில் கமலுடன் சிம்பு, திரிஷா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஜூன் ஐந்தாம் தேதி தக்லைப் திரைக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
இந்நிலையில் இன்று தமிழ் புத்தாண்டையொட்டி ராஜ்கமல் பிலிம்ஸ் இணையப்பக்கத்தில் தக்லைப் படத்தின் ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார்கள். அந்த வீடியோவில், கமல், சிம்புவின் கெட்டப்புகள் இடம்பெற்றிருக்கிறது. அதோடு, விண்வெளி நாயகா என்ற குரலும் ஒலிக்கிறது. அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில், புதிய வருடம் புதிய லைப் தக்லைப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகிறது என்று தெரிவித்துள்ளார்கள்.