நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் | விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? |
அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா படங்களுக்கு பிறகு வட சென்னை பாக்சிங் கதையில் பா.ரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை படம் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன்பிறகு ‛நட்சத்திரம் நகர்கிறது, தங்கலான்' போன்ற படங்களை இயக்கினார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, இந்தியாவின் முதல் தலித் கிரிக்கெட் வீரரான பல்வங்கர் பலூ என்பவரின் வாழ்க்கை வரலாறை படமாக்கப்போவதாக தெரிவித்தார். அவரது வாழ்க்கை வரலாறை ராமச்சந்திரன் குஹா என்பவர், ‛கார்னர் ஆப் எ பாரின் பீல்ட்' என்ற புத்தகமாக எழுதியுள்ளார். அதை தழுவி இந்த படத்தை தான் இயக்கப் போவதாகவும் கூறுகிறார் பா. ரஞ்சித்.