கோயில் பொக்கிஷ பின்னணியில் உருவாகும் புராண திரில்லர் ‛நாகபந்தம்' | இயக்குனரை தேர்ந்தெடுத்த கதை | ஐஸ்வர்யா ராஜேஷின் தெலுங்கு படம் அறிவிப்பு | வெளியீட்டிற்கு முன்பே லாபம் சம்பாதிக்கும் 'ஜனநாயகன்' | விஷால் 8 கோடி மோசடி குறித்து அரசு அறிக்கை: தயாரிப்பாளர் சங்க தலைவர் தகவல் | பிளாஷ்பேக்: முரளி இரண்டு வேடங்களில் நடித்த படம் | பிளாஷ்பேக்: தமிழில் படமான நோபல் பரிசு எழுத்தாளரின் கதை | பீடி, சுருட்டு குடிக்க பயிற்சி எடுத்த கீதா கைலாசம் | தயாரிப்பாளர் ஆனார் ஆண்ட்ரியா : மாஸ்க் படத்தில் வில்லத்தனமான கேரக்டர் | பிரித்விராஜூக்கு ஜோடியாக நடிக்க ஆசை ; பாக்யஸ்ரீ போர்ஸ் |

தமிழ் சினிமாவில் உள்ள மற்றுமொரு வாரிசு நடிகர் துருவ் விக்ரம். நடிகர் விக்ரமின் மகன். 2019ல் வெளிவந்த 'ஆதித்ய வர்மா' படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அந்தப் படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. அதன்பின் அப்பா விக்ரமுடன் இணைந்து 'மகான்' படத்தில் நடித்தார். அந்தப் படம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது. மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு துருவ் நடித்துள்ள 'பைசன்' படம் இந்த வருட தீபாவளிக்கு வெளியாக உள்ளது.
இன்று துருவ் விக்ரமின் பிறந்தநாள். அவருக்கு படத்தின் கதாநாயகியாக அனுபமா பரமேஸ்வரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இருவரும் காதலிப்பதாக ஏற்கெனவே கிசுகிசு உள்ளது. அந்த கிசுகிசு வந்த போது இருவரும் முத்தமிட்டுக் கொண்ட புகைப்படங்களும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், இருவருமே அது குறித்து எதுவும் சொல்லவில்லை. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பைசன்' தனக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் படமாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார் துருவ்.




