500 கோடி வசூலைக் கடந்த 'சாயாரா' | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'கனிமா' | ஸ்ரீதேவியை பார்த்து இன்ப அதிர்ச்சியான சுதீப் ; உஷார் படுத்திய விஜய் | அடூர் கோபாலகிருஷ்ணன் மன்னிப்பு கேட்க வேண்டும் ; பின்னணி பாடகர் சங்கம் கோரிக்கை | வேட்பு மனுவை நிராகரித்த தயாரிப்பாளர் சங்கம் ; நீதிமன்றத்தை நாடும் பெண் தயாரிப்பாளர் | இந்த ஆட்களை எல்லாம் நிச்சயமாக எல்சியுவில் சேர்க்க மாட்டேன் ; லோகேஷ் கனகராஜ் திட்டவட்டம் | பிளாஷ்பேக்: திறமையான திரைக்கதை, திகைக்க வைக்கும் நடிப்பால் வென்று காட்டிய “தெய்வமகன்” | திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் |
மலையாள திரையுலகில் பிரபல எழுத்தாளர், கதாசிரியர், இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர் மூத்த கலைஞரான இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன். சமீபத்தில் நடைபெற்ற ஒரு திரைப்பட மாநாட்டில் கலந்து கொண்ட இவர், அந்த மாநாட்டில் பாடகர்கள் சங்கம் சார்பாக கலந்து கொண்ட பின்னணி பாடகி புஷ்பாவதி என்பவர் குறித்து சர்ச்சை அளிக்கும் விதமாக கருத்தை கூறினார். அதாவது, 'இதுபோன்ற திரைப்பட மாநாடுகளில் பின்னணி பாடகர்களுக்கு என்ன வேலை, அழைப்பிதழ் கூட இல்லாமல் வந்து விடுகிறார்கள்' என்பது போன்று அவர் கூறியிருந்தார். இது மலையாள பின்னணி பாடகர்கள் சங்கத்தினரிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து பின்னணி பாடகர்கள் சங்கத்திலிருந்து அடூர் கோபாலகிருஷ்ணனுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும் அவர் பாடகி குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் அவர்கள் கூறும்போது, “திரைப்பட மாநாடு குறிப்பிட்ட எல்லை அளவிலேயே நடைபெற்று வந்த நிலையில் தற்போது அது இன்னும் பல அமைப்புகளை உடன் சேர்த்துக்கொண்டு விரிவு செய்யப்பட்டு வருகிறது. அதில் ஒரு அங்கமாகத்தான் பாடகர் சங்கமும் நிறைந்துள்ளது. அதன் சார்பாக தான் முறையான அழைப்புகளின் பெயரில் தான் பாடகி புஷ்பாவதி உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டனர். இப்படிப்பட்ட நடைமுறைகளை கூட சரியாக தெரிந்து கொள்ளாத மூத்த கலைஞர் அடூர் கோபாலகிருஷ்ணன் இப்படி கருத்து கூறியுள்ளது கண்டிக்கத்தக்கது. அவர் இது குறித்து தனது வருத்தத்தை தெரிவிக்க வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.