ஸ்லிம்மாக இருக்க ஊசியா : தமன்னா பதில் | நலமாக இருக்கிறேன் : மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கோவிந்தா | நலமுடன் வீடு திரும்பினார் தர்மேந்திரா | 'கும்கி- 2' படத்திற்கு இடைக்கால தடை போட்ட சென்னை உயர்நீதிமன்றம்! | 'டியூட்' படத்தை அடுத்து ஓடிடிக்கு வரும் 'பைசன்' | ரஜினியின் 'ஜெயிலர்- 2' படத்தில் இணைந்த மேக்னா ராஜ்! | அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் நடிக்கும் ‛மை டியர் சிஸ்டர்' | விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ‛ஜெய்பீம்' நடிகை | பாடல் வரிகள், டியூன் தானாக வந்தது, எல்லாம் அவன் செயல் : சத்ய சாய்பாபா பாடல் குறித்து தேவா நெகிழ்ச்சி | ஏ.ஆர் ரஹ்மானுடன் ஜானி மாஸ்டர் புகைப்படம் : சர்ச்சை கேள்விகளுக்கு சின்மயி பதிலடி |

மலையாள திரையுலகில் விரைவில் அதாவது ஆகஸ்ட் 15ம் தேதி நடிகர் சங்கத்துக்கான தேர்தலும் அதற்கு முதல் நாள் ஆகஸ்ட் 14ம் தேதி தயாரிப்பாளர் சங்கத்துக்கான தேர்தலும் நடைபெற இருக்கிறது. நடிகர் சங்கத்தில் கடந்த ஒரு வருட கால பரபரப்பிற்கு பின்பு தேர்தல் நடைபெற இருப்பது போல தயாரிப்பாளர் சங்கத்திலும் பல சர்ச்சைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக பெண் தயாரிப்பாளர் சான்ட்ரா தாமஸ் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக தயாரிப்பாளர் சங்கம் குறித்து பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இதனால் தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து கிட்டத்தட்ட திட்டமிட்டு அவர் ஓரம் கட்டப்பட்டார்.
இந்த நிலையில் தான், நடைபெற உள்ள தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் இன்று வேட்பு மனு ஆய்வு கூட்டம் நடைபெற்ற போது, அதில் அவரது மனுவை நிர்வாகிகள் குழு தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து சான்ட்ரா தாமஸ் நிர்வாகிகளிடம் கடுமையான வாக்குவாதம் செய்தார்.
அதனை தொடர்ந்து அவர் பத்திரிக்கையாளர்களிடம் பேசியபோது, “ தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ள பதவிகளுக்கு குறிப்பாக தலைவர் பதவிக்கு போட்டியிட வேண்டும் என்றால் மூன்று படமாவது தயாரித்திருக்க வேண்டும். நான் இதற்கு முன்பு பிரைடே பிலிம் ஹவுஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நடிகர் விஜய் பாபுவுடன் இணைந்து நடத்தி, படங்களை தயாரித்து வந்தேன். அதில் ஏழு படங்களை தயாரித்து இருக்கிறேன். தற்போது தனியாக இரண்டு படங்களை தயாரித்து இருக்கிறேன்.
இதற்கு முன்பு அந்த ஏழு படங்களிலும் சென்சார் சான்றிதழ் முதற்கொண்டு தயாரிப்பாளர் என்கிற இடத்தில் என் பெயர் தான் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்கு எனக்கான தகுதி இருக்கிறது. ஆனால் என்னை போட்டியிட விடாமல் செய்வதற்காக, எங்கே நான் போட்டியிட்டால் ஜெயித்து விடுவேனோ என்கிற பயத்தில் திட்டமிட்டு என்னுடைய மனுவை நிராகரிப்பு செய்துள்ளார்கள். நான் இதை நீதிமன்றத்தில் முறையிட இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.