'பீட்சா' படத்தில் நடித்தேன்: கவின் சொன்ன பிளாஷ்பேக் | அப்பா படத்தில் பங்கேற்க மகள்கள் ஆர்வம் | 47 வயது மஞ்சு வாரியர் பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்டார் | ஷாரூக்கானின் கிங் படத்தில் இணைந்த ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர்கள் | நவம்பர் 24 முதல் ‛அரசன்' படப்பிடிப்பு ஆரம்பம் | நவம்பர் 14ல் நெட் பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் டியூட் | இந்த வாரம், மூன்றே படங்கள் ரிலீஸ் | பொறுப்புணர்வு இல்லாமல் கேட்பது மன்னிப்பு அல்ல: கவுரி கிஷன் | ஒரே நாளில் தமிழ், தெலுங்கில் இரண்டு முக்கிய ரீரிலீஸ் | 50 கோடி வசூல் கடந்த 'பாகுபலி தி எபிக்' |

அமரன் படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி, சுதா கொங்கரா இயக்கி வரும் பராசக்தி போன்ற படங்களில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அனிருத் இசையில் உருவான மதராஸி படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் சிவகார்த்திகேயன்.
அவரிடம் இதுவரை நீங்கள் நடித்த படங்களில் எந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்புகிறீர்கள்? என்று கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், ‛‛ஏற்கனவே நடித்த படத்தின் அடுத்த பாகத்தில் நடிக்க வேண்டும் என்கிறபோதே பயமாக உள்ளது. காரணம் அதற்கேற்ற கதை கிடைக்க வேண்டும். அதோடு, முதல் பாகத்தின் வெற்றியும் பாதித்து விடக்கூடாது. நான் இதுவரை நடித்த படங்களில் மாவீரன் படத்தின் இரண்டாம் பக்கத்தில் நடிப்பதற்கு தான் ஆசையாக உள்ளேன். அது தனித்துவமான கதை'' என்று தெரிவித்துள்ளார் .
மாவீரன் படத்தை மடோன் அஸ்வின் இயக்க, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்க, இயக்குனர் மிஷ்கின் வில்லனாக நடித்திருந்தார். அசரீரி குரலாக விஜய் சேதுபதி வாய்ஸ் கொடுத்திருந்தார்.




