'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி |
பாலிவுட் மட்டுமல்லாது தென்னிந்தியாவிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்று, ஒவ்வொரு மொழியிலும் பல சீசன்களை கடந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த ஞாயிறன்று மலையாளத்தில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி துவக்க விழா கொண்டாட்டங்களுடன் துவங்கியது. மோகன்லால் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இதில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஜிசிலி தக்ரால் என்கிற நடிகை அனைவரது புருவத்தையும் உயர வைத்துள்ளார். காரணம் மிஸ் ராஜஸ்தான் பட்டமும் வென்ற இவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பே, அதாவது 2015ல் சல்மான்கான் ஹிந்தியில் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டவர்.
இப்படி ஏற்கனவே ஒரு மொழியில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, அதுவும் கேரளாவுக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத ராஜஸ்தானை சேர்ந்த ஒருவர் மலையாள பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது தான் இந்த ஆச்சரியத்திற்கு காரணம். அது மட்டுமல்ல ஹிந்தியில் மூன்று திரைப்படங்களில் நடித்த இவர், பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கி சர்வதேச ராப் பாடகரான ரெட் ராஸ் உள்ளிட்ட கலைஞர்கள் குழுவுடன் இணைந்து பயணித்து வந்தார். இந்த நிலையில் தான் மலையாள பிக்பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக இவர் நுழைந்துள்ளார்.