ஓடிடி தளத்திலும் வெளியாகும் 'பாகுபலி தி எபிக்' | 31 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸிற்கு தயாராகும் சுரேஷ் கோபியின் கமிஷனர் | பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி |

ராஜமவுலி இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில், பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யாகிருஷ்ணன், ரோகிணி மற்றும் பலர் நடிப்பில் 2015ல் வெளிவந்த 'பாகுபலி 1', 2017ல் வெளிவந்த 'பாகுபலி 2' ஆகிய இரண்டு படங்களையும் இணைத்து சில காட்சிகளை நீக்கி ஒரே படமாக 'பாகுபலி தி எபிக்' என்ற பெயரில் கடந்த மாதம் அக்டோபர் 31ம் தேதி தியேட்டர்களில் வெளியிட்டார்கள். இப்படம் மொத்தமாக 50 கோடிக்கும் அதிகமான வசூலைக் கடந்தது.
100 கோடி வசூலாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 50 கோடியுடன் படத்தின் வசூல் நிறைவடைந்தது. இருந்தாலும் இரண்டு படங்களையும் சேர்த்து மறு வெளியீடாக வந்த படம் இவ்வளவு கோடி வசூலித்ததே சாதனைதான்.
இப்போது 'பாகுபலி தி எபிக்' படத்தை ஓடிடி தளத்திலும் வெளியிட உள்ளார்களாம். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. 'பாகுபலி 1, 2' ஆகியவை ஏற்கெனவே ஓடிடி தளங்களில் உள்ள நிலையில் அவற்றை இணைத்த படமான 'தி எபிக்' படத்தையும் தனியாக ஓடிடி வெளியிடுகிறார்கள் என்பது ஆச்சரியம்தான்.