கமல் 237வது படத்திற்கு யார் இசையமைப்பாளர்? | தனுஷூடன் மோதும் வைபவ் | தீபாவளி ரிலீஸ் படங்கள் என்னென்ன? | சிறுவன் ஸ்ரீதேஜ்-ஐ சந்தித்த அல்லு அர்ஜுன் அப்பா | அமெரிக்காவில் 100 சதவீத வரி : இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனத் தகவல் | மனைவியை இழந்து கலங்கி நிற்கும் கவுண்டமணி : இரங்கல் கூட தெரிவிக்காத நடிகர்கள் | டூரிஸ்ட் பேமிலி படத்திற்கு வரவேற்பு : அதிகரிக்கும் தியேட்டர்கள் | வேலை நாட்களில் ஏமாற்றமடையும் ரெட்ரோ | குழந்தைகளை மகிழ்விப்பதில் மகிழ்ச்சி: வேதிகா | கணவன் மனைவி நடித்த யுகம் |
டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் யு-டியூப்பில் சினிமா விமர்சனம் செய்பவராக சந்தானம் வருகிறார். அவர் விமர்சனத்தால் பாதிக்கப்பட்ட இயக்குனரான செல்வராகவன் பேய் ஆகி, அவரை ஒரு சொகுசு கப்பலுக்கு அழைத்து செல்கிறார். அங்கே பல பேய்கள் இருக்க, சந்தானம் தப்பித்தாரா என்பது கதையாம். கவுதம் மேனனும் இதில் வில்லத்தனமான ரோலில் நடித்துள்ளார். அவரும், யாஷிகா ஆனந்தும் ‛காக்க காக்க' படத்தில் வரும் ‛உயிரின் உயிரே...' பாடலை இந்த படத்தில் காமெடியாக ரீ கிரியேசன் செய்துள்ளனர்.
அந்த காட்சிகளை பார்த்த சூர்யா ரசிகர்கள் கவுதம் மேனன் மீது கடும் கோபத்தில் உள்ளனர். சூர்யா, ஜோதிகா ப்ளூ கலர் காஸ்ட்யூமில், கடற்கரையில் ஸ்லோ மோஷனில் ஓடி வரும் உயிரின் உயிரே பாடல் காட்சி இன்றும் மாஸ். அதை கிண்டல் செய்யும் வகையில் அந்த காட்சியில் கவுதம் மேனனும், யாஷிகா ஆனந்தும் நடித்துள்ளனர். சில ஆண்டுகளாக சூர்யா மீது கவுதம் மேனன் வருத்தத்தில் இருக்கிறார். அவர் கால்ஷீட் கொடுக்காததால் கோபத்தில் இருக்கிறார். சூர்யாவை வெறுப்பேற்றவே இப்படிப்பட்ட காட்சியில் நடித்துள்ளார். கவுதம் மேனனுக்கு பாடம் புகட்ட வேண்டும் என சூர்யா ரசிகர்கள் பொங்குகிறார்கள்.