மலேசிய பாடகர் 'டார்க்கி' நாகராஜா வாழ்க்கை சினிமா ஆகிறது | வெப் தொடராக ஒளிபரப்பாகிறது முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலை வழக்கு | பிளாஷ்பேக்: ஹீரோக்கள் ஆதிக்கத்தை வென்ற மாதுரி தேவி | பிளாஷ்பேக்: சினிமாவில் சிவகுமாரின் 60வது ஆண்டு: தீராத அந்த இரண்டு ஏக்கங்கள் | ராணாவை நள்ளிரவில் எழுப்பிய கட்டப்பா ; 'ராணா நாயுடு' வெப் சீரிஸுக்கு வித்தியாசமான புரமோஷன் | மோகன்லால் மம்முட்டி பட டைட்டிலை தவறிப்போய் வெளியிட்ட இலங்கை சுற்றுலாத்துறை | 'குபேரா' தமிழ், தெலுங்கில் தான் படமாக்கினோம் : இயக்குனர் சேகர் கம்முலா தகவல் | மணிரத்னம் பட வாய்ப்பு கைநழுவி போனது இப்படித்தான்: மலையாள நடிகர் விரக்தி | தக் லைப் : கர்நாடகாவில் அடுத்த வாரம் ரிலீஸ் | விமர்சனத்திற்கு பணம் கேட்பதா ? கேரளாவிலும் இயக்குனர் கிளப்பிய சர்ச்சை.. போலீஸிலும் புகார் |
தமிழில் நடிக்கும் சில நடிகர்களுக்கு தெலுங்கிலும் ஓரளவிற்கு வியாபாரம் இருக்கிறது. அந்த அளவிற்கு அண்ணன், தம்பிகளான சூர்யா, கார்த்திக்கு அங்கு இருக்கும் ரசிகர்களால் குறிப்பிடத்தக்க வியாபாரம் அவர்களது படங்களுக்கு நடந்து வருகிறது. இருந்தாலும் தெலுங்கில் நேரடியாக எந்த ஒரு படத்திலும் சூர்யா நடித்ததில்லை. தெலுங்கு இயக்குனரான விக்ரம்குமார் இயக்கத்தில் '24' படத்தில் நடித்தார். ஆனால், அந்தப் படம் வரவேற்பைப் பெறவில்லை.
2016ல் வெளிவந்த இரு மொழிப் படமான 'ஊபிரி, தோழா' படத்தின் மூலம் தெலுங்கு இயக்குனரான வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ளார். அதன்பின் கார்த்தி தமிழ் இயக்குனர்களின் படங்களில் மட்டுமே நடித்து வந்தார்.
அடுத்தாக தெலுங்கு இயக்குனரான வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளார். தற்போது நடித்து வரும் தனது 45வது படத்திற்குப் பிறகு சூர்யா நடிக்க உள்ள படம் அது. நேற்று முன்தினம் வெளியான 'ஹிட் 3' தெலுங்குப் படத்தில் ஒரு சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்துள்ளார் கார்த்தி. அடுத்து 'ஹிட் 4' படத்தில் அவர்தான் கதாநாயகனாக நடிக்கப் போகிறார். 'ஹிட் 1, 2, 3' படங்களின் தெலுங்கு இயக்குனரான சைலேஷ் கொலானுதான் படத்தின் இயக்குனர்.
சூர்யா, கார்த்தி நடிக்க உள்ள இரண்டு படங்களுமே தமிழ், தெலுங்கில் உருவாகும் எனத் தகவல்.