இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

இந்திய அளவில் திரையுலக வசூலை 1000 கோடி என அசத்தலாக தூக்கி நிறுத்திய படங்களாக தென்னிந்தியப் படங்களான 'பாகுபலி 2, கேஜிஎப் 2, கல்கி 2898 எடி, புஷ்பா 2' ஆகிய படங்கள் அமைந்தன. அப்படங்கள் வழக்கமான படங்களை விடவும் மாறுபட்ட பிரம்மாண்டமான படங்களாக இருந்தது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
அப்படியான படங்கள் பற்றி வேவ்ஸ் 2025 மாநாட்டில் தன்னுடைய கருத்தைப் பதிவு செய்துள்ளார் நடிகர் நாகார்ஜுனா. “'புஷ்பா 2' போன்ற படங்கள் தெலுங்கு மாநிலங்களுக்கு வெளியே அதிக வசூலைக் குவித்தது. பெரிய திரையில் வெளிப்படும் மாயாஜாலத்தை அனுபவிப்பதற்காக 'புஷ்பா, கேஜிஎப், பாகுபலி' போன்ற படங்களை 100ல் 90 பேர் பார்க்கிறார்கள். புஷ்பா ராஜ், ராக்கி பாய், பாகுபலி போன்ற இயல்புக்கு மீறிய ஹீரோக்களைப் பார்க்க மக்கள் விரும்புகிறார்கள். தனிப்பட்ட விதத்தில் நானும் அத்தகைய படங்களையும் ஹீரோக்களையும் பார்க்க விரும்புகிறேன்.
அனைத்து படங்களும் ஹீரோ கதாபாத்திரங்களால் மட்டுமல்லாது வலுவான உள்ளடக்கத்தாலும் வெற்றி பெற்றுள்ளன. ராஜமவுலி கூட 'பாகுபலி' படத்தைத் தெலுங்கில்தான் உருவாக்கினார். ஆனால், அவை சர்வதேச அளவில் அங்கீகாரத்தைப் பெற்றார்,” என்று குறியுள்ளார்.