அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் நடிக்கும் ‛மை டியர் சிஸ்டர்' | விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ‛ஜெய்பீம்' நடிகை | பாடல் வரிகள், டியூன் தானாக வந்தது, எல்லாம் அவன் செயல் : சத்ய சாய்பாபா பாடல் குறித்து தேவா நெகிழ்ச்சி | ஏ.ஆர் ரஹ்மானுடன் ஜானி மாஸ்டர் புகைப்படம் : சர்ச்சை கேள்விகளுக்கு சின்மயி பதிலடி | 10 வருடங்களுக்கு பிறகு தாயின் மனக்குறையை தீர்த்து வைத்த மாளவிகா மோகனன் | அதிக சம்பளம் பெறும் அறிமுக நடிகராக லோகேஷ் கனகராஜ் | என் மகன்களுக்கு அந்த தைரியம் இல்லை : சிவா ரீமேக் குறித்து நாகார்ஜுனா ஓபன் டாக் | கமல் பாடலுடன் துவங்கிய கீரவாணி : ஸ்ருதிஹாசன் நெகிழ்ச்சி | அனந்தா திரை படைப்பல்ல... இறை படைப்பு : பா.விஜய் நெகிழ்ச்சி | பாலிவுட் தயாரிப்பாளர்களுடன் இணைந்த கார்த்திக் சுப்பராஜ் |

கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கில் நாகார்ஜுனா நடிப்பில் ராம்கோபால் வர்மா முதன்முறையாக இயக்குனராக அறிமுகமான சிவா திரைப்படம் வெளியானது. இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று இருவரின் திரையுலகப் பயணத்திலும் திருப்புமுனையாக அமைந்தது. இந்த நிலையில் இந்த திரைப்படம் தற்போது 4 கே முறையில் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு, வரும் நவம்பர் 14ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.
இது குறித்த புரமோஷன் நிகழ்ச்சிகளில் சமீபத்தில் நாகார்ஜுனா கலந்து கொண்டபோது அவரிடம் சிவா திரைப்படத்தை இப்போது ரீமேக் செய்தால் அதில் உங்கள் மகன்களில் நாகசைதன்யா, அகில் யார் அதற்கு பொருத்தமாக இருப்பார்கள் என நினைக்கிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த நாகார்ஜுனா என் பையன்கள் இருவருக்குமே அந்த தைரியம் இல்லை என்று வெளிப்படையாகவே பதில் அளித்தார்.
அதேசமயம் தமிழில் மலையூர் மம்பட்டியான் என்கிற படத்தில் நடித்த நடிகர் தியாகராஜன், அதே கதாபாத்திரத்தில் தன் மகன் பிரசாந்த்தை நடிக்க வைத்து அந்தப் படத்தை ரீமேக் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.