இரண்டாவது திருமணமா? : வதந்திக்கு மேக்னா ராஜ் கொடுத்த விளக்கம் | 10 வருடங்களுக்குப் பிறகு சிம்பு, சந்தானம் கூட்டணி | லாரன்ஸ், ஜேசன் சஞ்சய் படங்களில் நடிக்கும் டூரிஸ்ட் பேமிலி கமலேஷ் | அனிருத்துக்கு விஜய் தேவரகொண்டா எழுதிய காதல் கடிதம்! | காதலருடன் வந்து பாட்டிக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜான்வி கபூர் | தெலுங்கு இயக்குனர்களின் இயக்கத்தில் சூர்யா, கார்த்தி | இயல்புக்கு மீறிய படங்களை எதிர்பார்க்கும் ரசிகர்கள் : நாகார்ஜுனா | மலையாள படத்திற்காக பஹத் பாசிலுடன் மோதும் அர்ஜுன் தாஸ் | பழங்குடியினரை அவமதிக்கும் விதமாக பேசியதாக விஜய் தேவரகொண்டா மீது போலீஸில் புகார் | போனி கபூர், அனில் கபூரின் தாயார் மறைவு |
அஜித் கடந்த பல வருடங்களாக எந்த பட புரமோசனிலும் கலந்து கொள்ளவில்லை, எந்த மீடியாவையும் சந்தித்தில்லை. ஆனால் சமீபகாலமாக அவரது செயல்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளில் நடந்த கார் ரேஸ் போட்டிகளின் போது அங்குள்ள சில மீடியாக்களிடம் பேட்டி கொடுத்தார். சமீபத்தில் பத்மபூஷன் விருது பெற்றார். அதன்பின் டில்லியில் அவர் சில மீடியாக்களில் பேட்டி கொடுத்தார்.
அவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது : எனது இளமை காலத்தில், மோட்டார் ஸ்போர்ட்ஸ் மிகவும் விலை உயர்ந்த விளையாட்டு என்று எனது அப்பா சொன்னது நினைவில் இருக்கிறது. இந்த போட்டியில் நீ கலந்து கொள்ள என்னால் பணம் கொடுக்க முடியாது. இதில் உனக்கு எவ்வளவு ஆர்வம் இருக்கிறது என்று எனக்கு தெரியும். உனக்கான வழியை நீயே கண்டுபிடி என சொன்னார். அந்த சமயம் மாடலிங்கில் விருப்பம் இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள் எனக் ஒருவர் விசிட்டிங் கார்டு கொடுத்தார். மாடலிங் என்ன என்று புரியும் முன்பே சினிமா வாய்ப்பு வந்தது. மாடலிங், விளம்பரங்கள் மூலம் சம்பாதித்த எல்லா பணத்தையும் நான் மோட்டார் ஸ்போர்ட்ஸுக்காக செலவு செய்தேன்.
'வாலி' எனது மனதிற்கு மிகவும் நெருக்கமான படம். அது என்னை ஒரு தொழில்முறை நடிகராக்கியது. மக்கள் மத்தியில் இருந்து எனக்கு நிறைய அன்பு கிடைத்தது. இந்த படம் தான் எனக்கு நிறைய கதவுகளை திறந்து விட்டது. நான் ஆக்ஸிடென்டல் நடிகன்தான். எப்போது ஓய்வு பெறுவேன் என திட்டமிடவில்லை. ஆனால் வாழ்க்கையில் எதுவும் நடக்கலாம். எதுவும் நிரந்தரம் இல்லை.
தனிப்பட்ட முறையில் எனக்கு அரசியலில் எந்தவொரு ஆசையும் இல்லை. எனது சக நடிகர்கள் அரசியலில் குதித்துள்ளது என்பது, அவர்களின் தனிப்பட்ட விருப்பம். நான் அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் அரசியலுக்கு வரப்போவதாக பேசுகிறார்கள். நான் எப்போதும் அரசியலுக்கு அப்பால் தான் இருந்துள்ளேன். எனது நெருங்கிய நட்பு வட்டாரத்தில் பேசும்போது கூட அரசியல் குறித்துப் பேசமாட்டேன். இது தெளிவாக நானே எடுத்த முடிவுதான். வரும் காலத்திலும் அது அப்படியே இருக்கும். மாநில அரசியலாக இருந்தாலும், தேசிய அரசியலாக இருந்தாலும் எனது நட்பு வட்டாரத்திலேயே அது குறித்து சீக்கிரம் பேச மாட்டேன். இன்னும் சொல்லப்போனால் அரசியலுக்கு எப்போதுமே 'நோ' தான்.
இவ்வாறு அஜித் பேட்டி அளித்துள்ளார்.