நடுவுல கொஞ்சம் பக்ஸ்.... | 'குபேரா' முதல் நாள் வசூல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | பிளாஷ்பேக்: நிரந்தரத் திரைக்கலைஞர்களைத் தந்த “நிழல்கள்” | சிவகார்த்திகேயனின் 'மதராஸி' படத்தை 23 கோடிக்கு வாங்கிய நெட்பிளிக்ஸ்! | கோலிவுட் பிரபலங்களுக்கு பார்ட்டி கொடுத்த ரவி மோகன் - பாடகி கெனிஷா! | கந்தன் கருணை, ஷாஜகான், வேட்டையன் - ஞாயிறு திரைப்படங்கள் | 'குபேரா, சிதாரே ஜமீன் பர், டிஎன்ஏ' படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | 'கூலி' படத்தை கைப்பற்றிய நாகார்ஜூனா! | 'தி ராஜா சாப்' படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்துள்ள பிரபாஸ்! | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் மலையாள நடிகை! |
பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் நடிகர் அனில் கபூர் ஆகியோரின் தாயாரும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மாமியாருமான நிர்மல் கபூர் நேற்று மாலை உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். 90 வயதான இவர் மருத்துவ சிகிச்சைக்காக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.. பாலிவுட் திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் சென்று இவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் சுரீந்தர் கபூரின் மனைவியான நிர்மல் கபூருக்கு போனி கபூர், அனில் கபூர், சஞ்சய் கபூர் என மூன்று மகன்களும் மற்றும் ரீனா கபூர் என்கிற மகளும் இருக்கின்றனர். இதில் போனி கபூர், அனில் கபூர் மற்றும் அவரது வாரிசுகள் திரையுலகில் தற்போது பிரபலமாக இருக்கின்றனர். கடந்த செப்டம்பர் மாதம் தான் நிர்மல் கபூரின் 90வது பிறந்தநாளை குடும்பத்தினர் விமரிசையாக கொண்டாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.