வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் மே பத்தாம் தேதி நடைபெற உள்ளது. இதன் காரணமாக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அங்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரபல நடிகரான கிச்சா சுதீப் சில தினங்களுக்கு முன்பு கர்நாடக பாஜகவுக்கு ஆதரவாக தான் பிரச்சாரம் செய்ய போவதாக அறிவித்திருந்தார். இப்படியான நிலையில் தற்போது கர்நாடகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதனால் போலீசார் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் சென்னையில் இருந்து மும்பைக்கு காரில் கொண்டு செல்லப்பட்ட 39 லட்சம் மதிப்பிலான வெள்ளிப் பொருட்களை கர்நாடக போலீசார் பறிமுதல் செய்துள்ளார்கள். அதையடுத்து நடந்த விசாரணையின் போது அந்த கார் தயாரிப்பாளர் போனி கபூருக்கு சொந்தமானது என்பது தெரிவந்துள்ளது. அதையடுத்து அந்த வெள்ளி பொருட்களுக்கான உரிய ஆவணங்களை கொடுத்துவிட்டு எடுத்துச் செல்லுமாறு தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.