அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
''ஓ.டி.டி., தளம், இயக்குனர்களுக்கு புதிய களமாக மாறியுள்ளது'' என, திரைப்பட இயக்குனர் சுசீந்திரன் பேசினார்.
கோலிவுட் திரையுலகில் 'வெண்ணிலா கபடிக்குழு' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின் 'ஜீவா' உள்ளிட்ட தரமான, வெற்றி படங்களை இயக்கியவர் சுசீந்திரன். பின்னர், நான் மகான் அல்ல, பாண்டிய நாடு உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்து, மக்கள் மனதில் இடம் பிடித்தார். இவர், கோவை தனியார் கல்லுாரியில் நடந்த, தென்மாநில அளவிலான 'பதிவுகள்' குறும்பட விழாவில் பங்கேற்றார்.
விழாவில் சுசீந்திரன் பேசுகையில், ''என்னுடைய முதல் குறும்படத்தை கடந்த, 2003ம் ஆண்டு இயக்கினேன். அந்த படத்தை திரையிட எனக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால், இன்றைய மாணவர்கள் எடுக்கும் குறும்படங்களை திரையிட, பல்வேறு வாய்ப்புகள் கிடைக்கின்றன.
முதல் முறையாக எடுத்த படங்களை, பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டும். 20 ஆண்டுகளுக்கு முன், என்னுடன் இணைந்து பலரும் உதவி இயக்குனர்களாக சினிமா பயணத்தை துவங்கினர். அதில், 30-50 பேர் தான், சினிமாவில் நிலைத்து நிற்கின்றனர்.
பல கஷ்டங்களை கடந்தால் தான், சினிமா துறையில் வெற்றி சாத்தியமாகும். இன்றைய உதவி இயக்குனர்கள், ஓ.டி.டி., தளத்தை பயன்படுத்தி, பல்வேறு வெற்றிகளை குவித்து வருகின்றனர். தினமும் தொழில்நுட்பம் மாறி வருகிறது. அதற்கேற்ப மாணவர்கள் தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்,'' என்றார்.