சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் |

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் வலிமை படம் ஜனவரி 13-ஆம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஒமைக்கிறான் பரவல் காரணமாக திரையரங்குகளில் 50% பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு கட்டுப்பாடு விதித்திருக்கிறது. இரவுநேர ஊரடங்கு, ஞாயிறு அன்று முழு ஊரடங்கு போன்றவையும் விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர், பிரபாஸின் ராதே ஷ்யாம் போன்ற படங்களின் ரிலீஸ் தேதிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. அதனால் அஜித்தின் வலிமை பொங்கலுக்கு திட்டமிட்டபடி வெளியாகுமா? இல்லை ரிலீஸ் தேதியில் ஏதேனும் மாற்றம் ஏற்படுமா என்ற செய்திகளும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் வலிமை படத்தை வெளியிடுவதில் எந்த சிக்கலும் இருக்காது. அதே சமயம் வேறு ஏதேனும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் மட்டுமே ரிலீசில் மாற்றத்தை கொண்டு வர வேண்டிய சூழல் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதனால் வலிமை தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.