லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
சமீபத்தில் தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படம் நீண்ட நாளைக்கு பிறகு அவர் நடித்திருந்த ஒரு குடும்ப அம்சம் கொண்ட திரைப்படமாக வெளியானது. இந்த படத்தில் விஜய்யின் அம்மாவாக நடித்திருந்தார் பிரபல தெலுங்கு குணச்சித்திர நடிகை ஜெயசுதா. படத்தில் விஜய்க்கு அடுத்தபடியாக இவருக்கு தான் அதிக காட்சிகள் கொடுக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு சேனல் ஒன்றில் பேட்டி அளித்த ஜெயசுதாவிடம் நீங்கள் ஏன் அஜித்துடன் இணைந்து நடிக்கவில்லை என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஜெயசுதா, “அஜித்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு எனக்கு வலிமை படத்திலேயே வந்தது. அந்த படத்திற்காக ஒருநாள் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டேன். ஆனால் அந்த சமயத்தில் கொரோனா அலை பரவல் காரணமாக படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டபோது கொரோனா வைரஸ் தொற்று குறித்து ஏற்பட்ட பயத்தால் அந்த படத்தில் நடிக்காமல் விலகி விட்டேன்” என்று கூறியுள்ளார். அஜித்தின் அம்மாவாக அவர் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் தான் பின்னர் நடிகை சுமித்ரா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.