இமயமலை பயணத்தை நிறைவு செய்த ரஜனிகாந்த் | விஜய் தேவரகொண்டா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் | 2024 தேசிய விருதுகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடு | 'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் |
சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கி உள்ள படம் ‛மதராஸி'. அடுத்த மாதம் ஐந்தாம் தேதி இந்த படம் திரைக்கு வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தான் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருப்பதாக தெரிவித்தார் ஏ. ஆர் .முருகதாஸ்.
அவர் கூறும் போது, ‛‛ஆரம்பத்தில் நான் இயக்கிய ‛தீனா, ரமணா, கஜினி' போன்ற படங்களில் நடித்ததில்லை. ஆனால் விஜய்யை வைத்து இயக்கிய ‛துப்பாக்கி, கத்தி, சர்க்கார்' என்ற மூன்று படங்களிலும் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தேன். அதன் பிறகு இயக்கிய படங்களில் நடிக்காத நிலையில் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து இயக்கி உள்ள இந்த மதராஸி படத்திலும் நடித்துள்ளேன். இதற்கு முக்கிய காரணம் விஜய் படத்தில் என்ன வைப் இருக்குமோ அது இந்த படத்திலும் இருந்தது. அதன் காரணமாகவே ஒரு ஷாட்டில் நடித்தேன்'' என்றார் ஏ.ஆர்.முருகதாஸ்.