நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

‛ரத்னம், மதகஜராஜா' படங்களுக்கு பிறகு தற்போது ரவி அரசு இயக்கும் ‛மகுடம்' என்ற படத்தில் நடிக்கிறார் விஷால். இது அவரது 35வது படமாகும். சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் விஷாலுடன், அஞ்சலி, துஷாரா விஜயன், யோகிபாபு ஆகியோர் நடிக்கிறார்கள். இந்நிலையில் நேற்று மறைந்த நடிகர் விஜயகாந்தின் பிறந்தநாளையொட்டி மகுடம் படப்பிடிப்பு தளத்தில் அவரது புகைப்படத்துக்கு மலர்தூவி வணங்கி இருக்கிறார் விஷால். அதையடுத்து தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில், ‛என் அன்பான கேப்டன் விஜயகாந்த் அண்ணனின் பிறந்த நாளில் அவரை வணங்குகிறேன்.
நடிகர் சங்க கட்டடம் விரைவில் திறக்கப்படும் என்பதை நான் உறுதியளிக்கிறேன். தூய்மையான அரசியல்வாதி கேப்டன் 2026 தேர்தலில் போட்டியிட இப்போது இல்லை என்பது என் மனவருத்தம். உங்களை தேடிவரும் அனைவருக்கும் வயிறார உணவு வழங்கியும், படப்பிடிப்பின் போது ஏற்ற தாழ்வு இன்றி அனைவருக்கும் சரி சமமான உணவு வழங்கியதை, நான் எப்போதும் உங்கள் வழியில் செய்து வருவேன். நீங்கள் இன்று இல்லாவிட்டாலும் உங்கள் நினைவு எப்போதும் என்றென்றும் எல்லோரிடத்திலும் நிலைத்திருக்கும்' என்று பதிவிட்டுள்ளார். மேலும், நடிகர் சங்க கட்டடம் கட்ட வேண்டும் என்பது கேப்டன் விஜயகாந்தின் கனவு. அந்த கனவு இன்னும் இரண்டே மாதங்களில் நிறைவேறிவிடும். செப்டம்பர் மாதம் இறுதி இல்லையென்றால் அக்டோபர் மாதத்தில் கட்டட திறப்பு விழா நடைபெறும் என்று தெரிவித்துள்ளார் விஷால்.