அஜித்தின் 54வது பிறந்தநாள் : ஷாலினி வெளியிட்ட புகைப்படங்கள் | மனைவி , மகளுடன் கீழடி அருங்காட்சியகத்திற்கு சென்ற சிவகார்த்திகேயன் | சினிமா தயாரிப்பில் உலகின் மையமாக மாறி வரும் இந்தியா: மோடி பெருமிதம் | ஆக்ஷன் கலந்த துள்ளல் உடன் வெளிவந்துள்ள ‛ஆயா ரே பாபா' பாடல் | சசிகுமாரின் அடுத்தடுத்த பட இயக்குனர்கள் வரிசை | சிம்பு 49வது படத்தில் இணைந்த சந்தானம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஷாருக்கானின் கிங் பட வாய்ப்பை இழந்த நயன்தாரா | பயங்கரவாத தாக்குதலால் ‛தி பிக் பாலிவுட் ஒன்' நிகழ்ச்சியை தள்ளிவைத்த சல்மான் | அனைத்து போட்டியாளர்களுக்கும் வாழ்த்து தெரிவித்த சூர்யா | ரெயின்போவை ரசிக்கும் மகன்கள் : நயன்தாரா |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் ரெட்ரோ படம் மே ஒன்றாம் தேதியான இன்று திரைக்கு வந்துள்ள நிலையில், கங்குவாவில் தவறவிட்ட வெற்றியை இந்த படம் மீட்டுக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறார் சூர்யா. இந்த படம் தவிர்த்து இன்று சசிகுமார், சிம்ரன் நடித்திருக்கும் டூரிஸ்ட் பேமிலி, நானி நடித்த ஹிட்- 3, அஜய் தேவ்கன் நடித்த ரெய்டு -2 ஆகிய படங்களும் திரைக்கு வந்துள்ளன. அதனால் தனது ரெட்ரோ படத்துடன் வெளியாகும் இந்த படங்களும் வெற்றி பெற வேண்டும் என்று தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வாழ்த்து செய்தி வெளியிட்டு இருக்கிறார் சூர்யா. தன் படம் வெளியாகும் அதே நாளில் திரைக்கு வரும் மற்ற படங்களை தனக்கு போட்டியாக நினைக்காமல் அந்த படங்களும் வெற்றி பெற வேண்டும் என்று சூர்யா வாழ்த்து தெரிவித்திருப்பது பாராட்டுக்களை பெற்று வருகிறது.