மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
கடந்த 2023ம் ஆண்டில் ஷாருக்கான் நடிப்பில் பதான், ஜவான், டங்கி என மூன்று படங்கள் வெளியாகி வெற்றி பெற்றன. இந்த நிலையில் அடுத்தபடியாக கிங் என்ற படத்தில் மே 18ம் தேதியிலிருந்து நடிக்கப் போகிறார் ஷாருக்கான். ஆக்ஷன் கதையில் உருவாகும் இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்குகிறார். அபிஷேக் பச்சன் வில்லனாக நடிக்கிறார். 2023ம் ஆண்டில் இந்த படத்தில் நடிக்க ஷாருக்கானை ஒப்பந்தம் செய்தபோது தீபிகா படுகோனேவை தான் ஹீரோயினாக நடிக்க வைக்க முடிவு செய்தார்களாம். அதன்பிறகு அவர் கர்ப்பமாக இருந்ததால் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்திருந்த நயன்தாராவை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார்கள். ஆனால் கிங் படம் 2024ல் திட்டமிட்டபடி தொடங்காமல் இப்போது 2025, மே மாதம் தொடங்குவதால் தீபிகா படுகோனேவும் குழந்தை பிறந்து மீண்டும் நடிக்க தொடங்கி விட்டார். அதனால் முதலில் திட்டமிட்டபடி தீபிகா படுகோனேவையே கிங் படத்தின் கதாநாயகி ஒப்பந்தம் செய்துள்ளார்கள். இதனால் நயன்தாராவுக்கு கிடைக்க இருந்த வாய்ப்பு நழுவி சென்றுள்ளது. இந்த படத்தை அடுத்த ஆண்டு இறுதியில் வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளது.