சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வருகின்ற மே 1ம் தேதி அன்று திரைக்கு வரும் படம் 'ரெட்ரோ'. பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கான டிக்கெட் முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. மற்றொரு பக்கம் படத்தின் புரோமோசன் பணிகளும் தீவிரமாக நடக்கிறது.
இந்த படத்தின் புரோமோசன் நிகழ்வில் சூர்யா பேசியதாவது, "இப்படத்தின் காட்சிக்காக மட்டுமே சிகரெட் அடித்தேன். நிஜ வாழ்க்கையில் யாரும் தயவு செய்து சிகரெட் அடிக்காதீர்கள். ஒரு இழுப்பு தானே என்று ஆரம்பித்தால், விடவே முடியாது. அந்தச் செயலை எப்போதுமே ஆதரிக்க மாட்டேன்” என்று வேண்டுகோள் வைத்தார்.