தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா! | ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள் | ஜெயிலர் -2வில் நடிக்க அழைப்பு வருமா? தமன்னா எதிர்பார்ப்பு | தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேசி விமர்சனங்களில் சிக்கிய ரிஷப் ஷெட்டி! | 250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி' | அக்டோபர் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வார்-2! | ப்ரீ புக்கிங் - தனுஷின் இட்லி கடை எத்தனை கோடி வசூலித்துள்ளது? | அல்லு அர்ஜுனை ஆட்டுவித்த ஜப்பான் நடன இயக்குனர் | சினிமாவுக்கு மகன் வருவாரா அஜித் சொன்ன பதில் | 2வது படத்திலேயே அம்மாவாக நடிப்பது தவறா? தர்ஷனா கேள்வி |
அறிமுக இயக்குனர்கள் விக்ரம் ராஜேஸ்வர், அருண் கேசவ் இருவரும் இணைந்து இயக்கியுள்ள புதிய படம் 'சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்'. நடிகர் வைபவ், நடிகை அதுல்யா ரவி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆனந்த் ராஜ், ரெடின் கிங்ஸ்லி, மணி, ஜான் விஜய், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
டி. இமான் இசையமைக்கும் இப்படத்தை பீ.டி.ஜி யூனிவர்சல் நிறுவனம் தயாரிக்கின்றது. ஏற்கனவே இதன் படப்பிடிப்பு நிறைவு பெற்று சில மாதங்களாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் திடீரென இத்திரைப்படம் வருகின்ற ஜூன் 20ம் தேதியன்று திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளனர் . ஏற்கனவே இதே தேதியில் தனுஷின் 'குபேரா' படம் தமிழ், தெலுங்கில் வெளியாகிறது என அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.