சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு |

கடந்த 20 வருட பாலிவுட் சினிமாவை ஆய்வு செய்து பார்த்தால் நடிகர் அமீர்கான், மற்ற இரண்டு கான் நடிகர்களை போல, ஆக்சன் பாதையில் செல்லாமல் நல்ல கதை அம்சம் மற்றும் கதாபாத்திரம் கொண்ட படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருவதை பார்க்க முடியும். அந்த வகையில் கடந்த 2007ல் அவர் நடித்த படம் தான் 'தாரே ஜமீன் பர்'. ஒரு வித்தியாசமான நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கும் அமீர்கானுக்கும் இடையேயான பாசப்பிணைப்பை மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருந்தது. அமீர்கானே இந்த படத்தை இயக்கியும் இருந்தார். ஆஸ்கர் விருது போட்டி வரை இந்த படம் சென்றது.
தற்போது இந்த படம் வெளியாகி 18 வருடங்கள் கழிந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் என்று சொல்லும் விதமாக 'சிதாரே ஜமீன் பர்' என்கிற திரைப்படம் உருவாகி வந்தது. ஆனால் இந்தப்படத்தை இயக்குனர் ஆர்.எஸ்.பிரசன்னா என்பவர் இயக்கியுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்திருந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் வரும் ஜூன் 20ம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஒரு பேஸ்கட்பால் கோச்சாக அமீர்கான் நடிக்கிறார் என்பதை போஸ்டர் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.