வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
நடிகர் அர்ஜுன் கதையில் அவரது சகோதரி மகன் துருவ் சர்ஜா நாயகனாக நடிக்க, எ.பி. அர்ஜுன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த கன்னடத் திரைப்படம் 'மார்ட்டின்'. இப்படத்தை பான் இந்தியா படமாக வெளியிட்டனர்.
படத்தை யு டியுபர்கள் பலர் கடுமையாக விமர்சித்துள்ளனர். அதில் சிலரது வீடியோக்களை நீக்க வேண்டும் என்று படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காப்பிரைட் சிக்கலில் சிக்க வேண்டாமென சிலர் அவர்களது வீடியோவை பின்னர் நீக்கியுள்ளதாகவும் தெரிகிறது.
படத்திற்கு எதிராக வேண்டுமென்றே சிலர் நெகட்டிவ் விமர்சனங்களைக் கொடுத்தாக படக்குழு தரப்பில் குற்றம் சாட்டியுள்ளார்கள். அதனால் படத்தைக் காப்பாற்ற 'ஜான் டோ' ஆர்டரை அவர்கள் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
முகம் தெரியாத நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அனுமதிப்பதுதான் 'ஜான் டோ' ஆர்டர். விதிமீறல் அல்லது சட்டவிரோத நடவடிக்களில் அனைத்து தரப்பினரையும் அடையாளம் காண முடியாத ஒரு சூழலில் ஜான் டோ உத்தரவுகள் பயன்படுத்தப்படுகின்றன. யாரென்றே தெரியாத இணைய பயனாளிகள் மீது ஒரு நிறுவனம் சட்ட நடவடிக்கை எடுக்கவும் அந்த ஆர்டர் பயன்படுத்தப்படுகிறது என்கிறார்கள்.
பல கோடி செலவு செய்து எடுக்கப்பட்ட தங்களது படத்தின் வியாபாரத்தை பாதிக்கும் விதத்தில் நடந்து கொள்பவர்களைத் தடுக்க ஜான் டோ ஆர்டரை வாங்கியுள்ளதாக தயாரிப்பாளரும் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் கன்னடத் திரையுலகத்திலும், விமர்சகர்களிடத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வருடம் மலையாள சினிமாவில் தயாரிப்பாளர் ஒருவர் தனது படத்திற்கு யு டியுப் விமர்சனங்களை ஏழு நாட்களுக்கு யாரும் செய்யக் கூடாது என ஒருவர் நீதிமன்றத்தை நாடிய சம்பவமும் நடந்தது.
ஜான் டோ ஆர்டர் என்பது பொதுவாக திரைப்படம் மற்றும் இசை சார்ந்த அறிவுசார் சொத்துரிமை விஷயங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது அதை திரைப்படம் சார்ந்த விமர்சனங்களுக்கும் பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்களோ என்ற சந்தேகம் விமர்சகர்களிடம் எழுந்துள்ளது.
திரைப்படங்களை, அதன் காட்சிகளை அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என்பதற்காக ஜான் டோ ஆர்டர்கள் இதற்கு முன்பு சில ஹிந்திப் படங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் விமர்சனங்களுக்குத் தடை விதிக்கும் விதத்திலோ அல்லது தடுக்கும் விதத்திலோ அவை பயன்படுத்தப்படுமா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.
100 கோடி ரூபாய் செலவு செய்து எடுக்கப்பட்ட 'மார்ட்டின்' திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்று மிகக் குறைந்த அளவில் வசூல் செய்து தோல்வி அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.