சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
தென்னிந்தியத் திரையுலகத்தில் அக்டோபர் 10ம் தேதி மிகப் பெரும் வெளியீடாக ரஜினிகாந்த் நடித்துள்ள 'வேட்டையன்' படம் வெளியாக உள்ளது. இருந்தாலும் அக்டோபர் 11ம் தேதி 'பிளாக்' தமிழ்ப் படமும், பான் இந்தியா வெளியீடாக வர உள்ள கன்னடப் படமான 'மார்ட்டின்' படமும் வெளியாக உள்ளன.
'கேஜிஎப்' படங்களுக்குப் பிறகு கன்னடத் திரையுலகத்தில் அதிக பட்ஜெட் படங்கள் வருடத்திற்கு ஒன்றிரண்டாவது வெளியாகின்றன. அப்படி ஒரு படமாக 'மார்ட்டின்' படத்தை பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளார்கள். கர்நாடகாவைப் பொறுத்தவரையில் இப்படம் அதிக தியேட்டர்களில் வெளியாகலாம். இருந்தாலும் ரஜினிகாந்த் நடிக்கும் படம் வருகிறதென்றால் பெங்களூரு உள்ளிட்ட மாநகரங்களில் அப்படத்திற்குத்தான் அதிக தியேட்டர்கள் கிடைக்கும்.
பிறமொழிப் படங்களை வெளியிடும் மாநிலங்களான கேரளா, தெலங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் ரஜினி படத்திற்குத்தான் முன்னுரிமை வழங்கப்படும். அந்தப் போட்டியை 'மார்ட்டின்' சமாளிக்குமா என்பது சந்தேகம்தான். துருவ் சர்ஜா, வைபவி சாண்டில்யா மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். நடிகர் அர்ஜுன் இப்படத்திற்கு கதை எழுதியிருக்கிறார்.