Advertisement

சிறப்புச்செய்திகள்

பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா

22 செப், 2024 - 05:47 IST
எழுத்தின் அளவு:
Balakrishna-paid-a-surprise-visit-to-Venkateshs-shooting-location


நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் கலந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் எப்-2. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் அடுத்த பாகம் எப்-3 என்கிற பெயரில் வெளியாகி அதுவும் ஓரளவு வரவேற்பை பெற்றது. இரண்டு படங்களையும் பிரபல இயக்குனர் அனில் ரவிபுடி இயக்கியிருந்தார்.

இந்த நிலையில் இவர்கள் கூட்டணியில் மூன்றாவதாக தற்போது புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகர் ராணா வில்லனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் மீனாட்சி சவுத்ரி ஆகியோர் நடிக்கின்றனர். நகைச்சுவை நடிகர் விடிவி கணேஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் பாலகிருஷ்ணா திடீரென சர்ப்ரைஸ் விசிட் அடித்து படக்ழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். பாலகிருஷ்ணா தற்போது நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பும் இதற்கு அருகிலேயே நடந்து வருவதால் தனக்கு கிடைத்த இடைவெளி நேரத்தில் அவர் தனது நண்பரான வெங்கடேஷின் படப்பிடிப்பி தளத்திற்கு வந்ததாக சொல்லப்படுகிறது. இது குறித்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளன.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம்நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; ... இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)