ரஜினி 173வது படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா கமல்? | பராசக்தி படத்தின் டப்பிங் பணியில் ரவி மோகன் | மீண்டும் சிறப்பு பாடலுக்கு நடனமாடிய ஸ்ரேயா சரண் | தேரே இஸ்க் மெயின் படத்தில் பிரபுதேவா? | ரிவால்வர் ரீட்டா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதை படத்தின் வெற்றியை முடிவு செய்கிறது : பிரியா பவானி சங்கர் | மகா காலேஸ்வரர் கோயிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் வழிபாடு | பிளாஷ்பேக்: “மந்திரிகுமாரி”யால் திரைப்பட வடிவம் பெறாமல் போன “கவியின் கனவு” மேடை நாடகம் | 'பீட்சா' படத்தில் நடித்தேன்: கவின் சொன்ன பிளாஷ்பேக் | அப்பா படத்தில் பங்கேற்க மகள்கள் ஆர்வம் |

நடிகர் தனுஷ் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமான செல்வராகவன் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் அவருக்கு சமமான இன்னொரு நாயகன் கதாபாத்திரத்தில் நடித்தவர் அபினய். அதுமட்டுமல்ல பஹத் பாசில் கதாநாயகனாக அறிமுகமான கையெட்டும் தூரத்து படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து மலையாளத்தில் மட்டுமே மிகப்பெரிய அளவில் கவனம் செலுத்தி வந்த அபினய் 2014க்கு பிறகு சினிமாவில் பெரிய அளவில் நடிக்கவில்லை. துப்பாக்கி, அஞ்சான் படங்களில் நடித்த வித்யுத் ஜாம்வாலுக்கு இவர் தான் டப்பிங் குரல் கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் இவர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு ஆளே ஒரு தெரியாத அளவிற்கு மெலிந்து மாறியுள்ளார். சமீபத்தில் இவர் தன் உடல்நிலை குறித்து வெளியிட்ட வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இவரது சிகிச்சைக்காக ரூ.28 லட்சம் தேவைப்படுவதாக தெரிகிறது.
இந்த நிலையில் பலருக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து வரும் விஜய் டிவி புகழ் கேபிஒய் பாலா, அபினயின் வீட்டிற்கே நேரில் சென்று அவரை சந்தித்து ஆறுதல் கூறி, உதவி தொகையாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். இவர்கள் சந்திப்பு குறித்த வீடியோவும் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. தன்னுடன் முதல் படத்தில் இணைந்து நடித்த நடிகர் என்பதால் இந்த விஷயம் கேள்விப்பட்டு நடிகர் தனுஷ் அபினய்க்கு உதவிக்கரம் நீட்டுவாரா என பார்க்கலாம்.




