கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'கூலி' படத்தின் டிரைலர் இன்று இரவு 7 மணிக்கு வெளியாக உள்ளது. இதற்கான விழா இன்று மாலை சென்னையில் நடைபெற உள்ளது. ரஜினி இன்று என்ன பேசப் போகிறார் என பலரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
அது ஒரு புறமிருக்க, லோகேஷ் - ரஜினி முதல் முறையாகக் கூட்டணி சேர்ந்துள்ள 'கூலி' படத்தின் டிரைலர் முந்தைய தமிழ் சினிமா டிரைலர் சாதனைகளை முறியடிக்குமா என்ற ஒரு எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. லோகேஷ், விஜய் கூட்டணி இணைந்த 'லியோ' படத்தின் டிரைலர் 2023ல் யு டியூபில் வெளியாகி 24 மணி நேரத்தில் 32 மில்லியன் பார்வைகளைப் பெற்றிருந்தது. அந்த சாதனையை விஜய் நடித்து வெளிவந்த 'தி கோட்' டிரைலர் முறியடித்தது.
ரஜினி படங்களில் 'ஜெயிலர்' டிரைலர் 24 மணி நேரத்தில் 10.4 மில்லியன்கள் பெற்றதே அவருடைய அதிகபட்ச சாதனையாக உள்ளது.
லோகேஷ், ரஜினி கூட்டணி முந்தைய தமிழ் சினிமா டிரைலர்களின் சாதனையை முறியடிக்கும் என்று எதிர்பார்ப்பு அவர்களது ரசிகர்களிடம் எழுந்துள்ளது. இந்தப் படத்தில் மற்ற மொழி மல்டிஸ்டார்கள் நடித்திருப்பதால் மற்ற மொழிகளிலும் டிரைலரைப் பார்க்க ஆர்வம் காட்டுவார்கள். இன்னும் சில மணி நேரங்களில் இதன் டிரென்ட் எப்படி இருக்கும் என்று தெரிந்துவிடும்.