நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் | விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? |
மலையாள திரையுலகின் மூத்த நடிகையான பொன்னம்மா நேற்று காலமானார். எண்பது வயதான அவர் கிட்டத்தட்ட 65, 70 வருடங்களாக சினிமாவுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். 800க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள அவர் அதிகப்படியாக அம்மா கதாபாத்திரங்களில் தான் நடித்துள்ளார். அம்மா கதாபாத்திரம் என்றாலும் ஒவ்வொரு படத்திலும் மாறுபட்ட நடிப்பை வழங்கி மோகன்லால், மம்முட்டி சுரேஷ்கோபி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுக்கு அம்மாவாக பல படங்களில் நடித்துள்ளார்.
அவரது மறைவு குறித்து மலையாள நட்சத்திரங்கள் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருவதுடன் அவருடனான தங்களது அனுபவம் குறித்தும் பேசி வருகின்றனர். அந்த வகையில் கிரீடம், வியட்நாம் காலனி, பரதம், நாட்டு ராஜாவு உள்ளிட்ட 33 படங்களில் தனக்கு அம்மாவாக நடித்த கவியூர் பொன்னம்மாவுக்கு நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்திய மோகன்லால் அவர் குறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்,
அதில் அவர் கூறும்போது, “அன்புள்ள பொன்னம்மா சேச்சி. நீங்கள் என்னுடைய கதாபாத்திரங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் ஒரு தாயின் உண்மையான அன்பை தந்தீர்கள். மலையாள ரசிகர்களை பொறுத்தவரை நாங்கள் அம்மா மகனாகவே வாழ்ந்தோம். இத்தனை வருடங்களில் ஒன்றாக அம்மா மகனாக நடித்ததன் மூலமாக ஒரு மகன் எப்போதும் தனது அம்மாவுக்கு மகன் தான் என்பதை காட்டின. படங்களில் நான் அவரது மகனாக நடிக்க வேண்டி வந்ததில்லை. அவரது மகனாகவே வாழ்ந்து கொண்டிருந்தேன்” என்று கூறியுள்ளார்.