விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் பிட்னஸில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். அரவிந்த சமேத வீரராகவ படத்தில் இருந்து ஒவ்வொரு படத்திலும் தனது கெட்டப்பை மாற்றி நடித்து வருகிறார். அப்படத்தில் இடம் பெற்ற ஒரு அதிரடியான ஆக்சன் கட்சியில் முதல் முறையாக சிக்ஸ் பேக் உடல் கட்டுக்கு மாறி நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார். அதன்பிறகு சில படங்களில் சிக்ஸ்பேக் வைத்திருந்த ஜூனியர் என்டிஆர், தற்போது ஹிருத்திக் ரோஷன் உடன் இணைந்து நடித்திருக்கும் வார் 2 படத்தில் மீண்டும் சிக்ஸ்பேக் கெட்டப்புக்கு மாறி நடித்துள்ளார். இது குறித்த புகைப்படங்களை வெளியானதை அடுத்து அவரது ரசிகர்கள் சோசியல் மீடியாவில் டிரெண்டிங் செய்து வருகிறார்கள். மேலும், இதே படத்தில் நடித்துள்ள பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன், சிக்ஸ் பேக், எயிட் பேக் எல்லாம் வைக்கக்கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.