ரஜினி படத்தை தயாரிக்கும் கமல்: சுந்தர் சி இயக்குகிறார் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | 'பராசக்தி' படம் என் மீதான கவர்ச்சி பிம்பத்தை மாற்றும்! -ஸ்ரீ லீலா நம்பிக்கை | ஸ்ரீகாந்த், ஷ்யாம் நடிப்பில் தி ட்ரெய்னர் | 'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு' படப்பிடிப்பு தொடங்கியது | வெப் தொடரான கார்கில் போர் | ஹாலிவுட் நடிகை டயான் லாட் காலமானார் | இயக்குனராக புதிய பிறப்பு கொடுத்தவர் நாகார்ஜுனா : ராம்கோபால் வர்மா நெகிழ்ச்சி | என்னுடைய தொடர் வெற்றிக்கு இதுதான் காரணம்: விஷ்ணு விஷால் | மணிரத்னம் படத்தில் நடிப்பது பெரிய ஆசீர்வாதம்: பிரியாமணி | கேரள அரசு விருது குழுவின் தலைமையை கடுமையாக விமர்சித்த மாளிகைப்புரம் சிறுமி |

பாலிவுட்டில் அடுத்ததாக மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக 'வார்-2' உருவாகி உள்ளது. பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் கதாநாயகனாக நடிக்க இன்னொரு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிகர் ஜூனியர் என்டிஆர் நடித்துள்ளார். ஹிந்தியில் இவருக்கு இதுதான் முதல் படம். கதாநாயகியாக கியாரா அத்வானி நடித்துள்ளார். அயன் முகர்ஜி இயக்கியுள்ளார். வரும் ஆகஸ்ட் 14ம் தேதி கூலி திரைப்படம் வெளியாகும் அதே நாளில் தான் இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தில் யார் யாருக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டது என்று சமீபத்தில் ஒரு பேட்டியல் சோசியல் மீடியாவில் வெளியானது.
அதில் கதாநாயகன் ஹிருத்திக் ரோஷனுக்கு 48 கோடி சம்பளம் என்றும் அதேசமயம் அதில் வில்லனாக நடித்துள்ள ஜூனியர் என்டிஆருக்கு 60 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கதாநாயகி கியாரா அத்வானிக்கு 15 கோடியும், இயக்குனர் அயன் முகர்ஜிக்கு 32 கோடியும் சம்பளமாக கொடுக்கப்பட்டு கிட்டத்தட்ட 250 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படி பாலிவுட்டில் முன்னணியில் இருக்கும் ஒரு கதாநாயகனை விட முதன்முறையாக பாலிவுட்டில் அடி எடுத்து வைத்துள்ள ஜூனியர் என்டிஆருக்கு அதிக சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது பாலிவுட் திரையுலகையும் அங்குள்ள ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.