விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
மலையாளத்தில் மட்டுமல்லாது தென்னிந்திய அளவில் விரும்பப்படும் இளம் முன்னணி நடிகராக பஹத் பாசில் மாறிவிட்டார். நேற்று (ஜூலை 25) அவரும் வடிவேலுவும் இணைந்து நடித்த மாரீசன் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. மாமன்னனுக்கு பிறகு தமிழில் தன்னை ஈர்த்த கதை இதுதான் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரே கூறியுள்ளார்.. மேலும் அவர் கூறும்போது, “மோகன்லால் படம் ஒன்றை ரீமேக் செய்து என்னை நடிக்க வையுங்கள்” என்று பிரபல இயக்குனரை தான் தொடர்ந்து நச்சரித்து வருவதாகவும் ஒரு புதிய தகவலை கூறியுள்ளார் பஹத் பாசில். அந்த இயக்குனர் அமல் நீரத். இதற்கு முன்னதாக அயோபிண்டே புஸ்தகம் மற்றும் வரதன் என இரண்டு படங்களில் அமல் டைரக்சனில் பஹத் பாசில் நடித்துள்ளார்.
பஹத் பாசில் நடிக்க விரும்பியது 1989ல் மோகன்லால் நடிப்பில் பத்மராஜன் இயக்கத்தில் கல்ட் கிளாசிக் படமாக வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற 'சீசன்' படத்தை தான். “இந்தப் படத்தின் ரீமேக்கில் எப்படியாவது நடித்து விட வேண்டும் என்பது என்னுடைய ஆசை. இயக்குனர் அமல் நீரத்திடம் அடிக்கடி இந்த படத்தின் ரீமேக்கை நீங்கள் இயக்குங்கள், நான் நடிக்கிறேன்.. எல்லாம் சரியாக அமைந்தால் நானே இந்த படத்தையும் தயாரிக்கிறேன் என்று அடிக்கடி நச்சரித்து வருகிறேன்” என்றும் கூறியுள்ளார்.
அது மட்டுமல்ல ரசிகர்கள் தவறவே விடக்கூடாது என ஐந்து படங்களை பட்டியலிடுங்கள் என அவரிடம் கேட்கப்பட்டபோது, அவர் கூறிய படங்களில் இதுவும் ஒன்று, இவற்றைத் தவிர ரஜினிகாந்தின் 'ஜானி', அமிதாப் பச்சனின் 'மிழி' இத்தாலிய படங்களான 'மலினா' மற்றும் 'II போஸ்டினோ ; தி போஸ்ட் மேன்' ஆகிய படங்களையும் குறிப்பிட்டுள்ளார். பஹத் பாசில்.