திரிஷ்யம் 3: பூஜையுடன் ஆரம்பம் | மோகன்லாலுக்கு மம்முட்டி, சிரஞ்சீவி வாழ்த்து | சாலைவாசிகளுக்கு போர்வை வழங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ் | படப்பிடிப்பில் விபத்து: கொதிக்கும் எண்ணெய் கொட்டி சான்வி காயம் | 'தாதா சாகேப் பால்கே' விருது மலையாள சினிமா கலைஞர்களுக்கு சமர்ப்பணம்: மோகன்லால் | 'மதராஸி' வெற்றியைக் கொண்டாடிய படக்குழு | பிளாஷ்பேக்: 300வது படத்தை இசையால் தாலாட்டிய இளையராஜா | பிளாஷ்பேக்: அந்தக்கால வடிவேலு | ராதிகாவின் தாயார் காலமானார் | பிளாஷ்பேக்: மதுரை தங்கம் திரையரங்கில் தூள் கிளப்பிய கே பாக்யராஜின் “தூறல் நின்னு போச்சு” |
மகேஷ் பாபு நடிப்பில் தனது புதிய படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் ராஜமவுலி. அவருடன் பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் சுகுமாரன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்ற நிலையில், அதன்பிறகு ஓடிசாவில் உள்ள கோராபுட்டில் நடைபெற்றது. தற்போது ஐதராபாத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் எம். எம். கீரவாணியுடன் இணைந்து கம்போசிங்கை தொடங்கி இருக்கிறார் ராஜமவுலி. அதேசமயம் இன்னொரு பக்கம், ஐதராபாத்தில் உள்ள அலுமினியம் தொழிற்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஸ்டன்ட் மேன்கள் ஒரு பெரிய சண்டை காட்சிக்கான ஒத்திகை பார்த்து வருகிறார்கள். இந்த சண்டைக் காட்சியை தான்சானியாவில் படமாக்க திட்டமிட்டுள்ளார் ராஜமவுலி. அதையடுத்து ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் ஆப்பிரிக்காவில் அடுத்தகட்ட படப்பிடிப்பை தொடங்கப் போகிறார்.