கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் | சிம்பு மீது அதிருப்தியில் தமன்? | மீண்டும் இணையும் மதகஜராஜா கூட்டணி | சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி |
தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவாக நடித்து வரும் மகேஷ்பாபுவுக்கு கவுதம் என்கிற மகனும், சித்தாரா என்கிற மகளும் இருக்கின்றனர். இங்கே தமிழ் திரையுலக பிரபலங்களைப் போல் அல்லாமல் தனது மகன், மகள் இருவரையுமே வெளியுலகத்திற்கு அறிமுகப்படுத்தியே வளர்த்து வருகிறார் மகேஷ்பாபு. இதில் மகன் கவுதம் நியூயார்க்கில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தார். சமீபத்தில் அவர் பள்ளிப்படிப்பை முடித்ததை தொடர்ந்து பட்டம் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் தனது குடும்பத்தினருடன் நேரில் சென்று கலந்து கொண்டார் மகேஷ்பாபு. பட்டமளிப்பு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள நடிகர் மகேஷ்பாபு.
இது குறித்து மகேஷ்பாபு நெகிழ்ச்சியுடன் கூறும்போது, “என்னுடைய இதயம் பெருமையால் வெடிக்கிறது. உன்னுடைய கிராஜுவேஷனுக்காக என்னுடைய வாழ்த்துக்கள் மகனே.. இது நீ எழுதி இருக்கும் உன்னுடைய அடுத்த அத்தியாயம்.. அது மட்டுமல்ல.. முன் எப்போதையும் விட நீ இன்னும் பிரகாசிப்பாய் என்பதும் எனக்கு தெரியும். உன்னுடைய கனவுகளை துரத்திச் செல்.. உன்னுடைய தந்தையாக இன்று நான் மிகவும் பெருமைப்படுகிறேன்” என்று வாழ்த்தியுள்ளார்.