சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் குறிப்பிடத்தக்கவராக வலம் வருபவர் நடிகர் ரவிதேஜா. இவரின் நடிப்பில் கடந்த வருடம் டைகர் நாகேஸ்வர ராவ் என்கிற படம் வெளியானது. இந்த படத்தை இயக்குனர் வம்சி இலக்கி இருந்தார். கடந்த வருடம் நவம்பர் மாதம் இந்த படம் ஓடிடி தளத்திலும் வெளியானது. இந்த நிலையில் இந்த படம் 'இந்தியன் சைன் லாங்குவேஜ்' எனப்படும் காது கேளாதவர்களுக்கான இந்திய சிறப்பு மொழியில் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் இப்படி இந்த சிறப்பு மொழியில் வெளியாகும் முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து தகவலை பகிர்ந்து கொண்டுள்ள படத்தின் தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால், “இந்திய சினிமாவில் இது ஒரு புதிய அத்தியாயம். இது போன்று இன்னும் பல படங்களை வரும் காலத்தில் இந்த பிரத்யேக மொழியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளேன். ஓடிடியில் இப்படி வெளியாகும் முதல் படம் இது என்பதுடன் இந்திய ரசிகர்களுக்கு மட்டுமல்லாது உலக அளவில் இதுபோன்று குறைபாடு கொண்ட ரசிகர்களும் ஏற்றுக்கொள்ளும் விதமாக இதை உருவாக்கி இருக்கிறோம். இந்திய சினிமாவில் இது போன்ற ஒரு முக்கியமான மாற்றத்தை முதல் ஆளாக முன்னெடுப்பதில் பெருமைப்படுகிறோம்” என்று கூறியுள்ளார்.