100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? | 'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? | சமூக வலைத்தள கொள்ளையர்கள் : IFTPC காட்டம் | பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி |
மலையாள சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் உமர் லுலு. ஹேப்பி வெட்டிங், ஜிங்ஸ், ஒரு அடார் லவ், நல்ல சமயம், டமாக்கா , பேட் பாய்ஸ் உள்பட பல படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில், பட வாய்ப்பு தருவதாக கூறி ஒமர் லுலு தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக மலையாள நடிகை போலீசில் புகார் அளித்துள்ளார்.
பல படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்த அந்த நடிகை ஒமர் லுலு இயக்கிய படங்களிலும் நடித்துள்ளார். விரைவில் ஹீரோயினியாக அறிமுகப்படுத்துவதாக அந்த நடிகைக்கு ஆசை வார்த்தை கூறி அவரை பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதனால் அந்த நடிகை கொச்சி அருகே உள்ள நெடும்பச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் கொடுத்துள்ள மனுவில், படவாய்ப்பு தருவதாக கூறி நட்பாக பழகி ஒமர் லுலு கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை தன்னை பல முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து இயக்குனர் ஒமர் லுலு மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.