பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் | பிளாஷ்பேக்: கல்கியின் நிறைவேறாத கனவு | தெலுங்கில் மகேஷ்பாபுவின் உறவினருக்கு ஜோடியாக அறிமுகமாகும் ரவீனா டாண்டன் மகள் | 15 நாட்கள் கிடையாது.. 5 நாட்கள் தான் ; வா வாத்தியார் தயாரிப்பாளர் கெடுபிடி | நான் இப்போ சிங்கிள் : மூன்றாவது கணவரை பிரிந்த பிறகு நடிகை மீரா வாசுதேவன் அறிவிப்பு |

லாஸ் ஏஞ்சல்ஸ் : பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸிற்கு கவுரவ ஆஸ்கர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. இவரது பெயர் ஏற்கனவே 4 முறை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
மிஷன் இம்பாசிபிள் சீரிஸ் படத்தின் மூலம், உலகளவில் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் டாம் குரூஸ். 63 வயதானாலும், சண்டை மற்றும் சாகச காட்சிகளில் டூப் போடாமல் இவரே ஏற்று நடிப்பார். அவரது இந்த அர்ப்பணிப்பால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை உருவாக்கிக் கொடுத்துள்ளது. இவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் திரைத்துறையில் விளங்கி வருகிறார்.
இந்த நிலையில், பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான டாம் குரூஸ், திரைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பிற்காக, அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அன்ட் சயின்ஸ் அமைப்பு, அவருக்கு கவுரவ ஆஸ்கர் விருதை அறிவித்தது. இதற்கு முன்பாக, பார்ன் ஆன் தி போர்த் ஆப் ஜூலை மற்றும் ஜெரி மகுயர் ஆகிய படங்களுக்காக சிறந்த நடிகருக்காகவும், மேக்னோலியா திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்காவும், டாப் கன் : மாவெரிக் திரைப்படத்தின் தயாரிப்பாளர் என 4 முறை ஆஸ்கர் விருதுக்கு இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த நிகழ்ச்சியில் கவுரவ ஆஸ்கர் விருதை, டாம் குரூஸ் பெற்றுக் கொண்டார். அவருடன் இணைந்து டெபி ஆலன், வின் தாமஸ் மற்றும் டோலி பார்டன் ஆகியோருக்கும் கவுரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.