தெலுங்கில் மகேஷ்பாபுவின் உறவினருக்கு ஜோடியாக அறிமுகமாகும் ரவீனா டாண்டன் மகள் | 15 நாட்கள் கிடையாது.. 5 நாட்கள் தான் ; வா வாத்தியார் தயாரிப்பாளர் கெடுபிடி | நான் இப்போ சிங்கிள் : மூன்றாவது கணவரை பிரிந்த பிறகு நடிகை மீரா வாசுதேவன் அறிவிப்பு | கவுரவ ஆஸ்கர் விருது பெற்ற டாம் குரூஸ் | இரண்டு பாகங்களாக உருவாகும் பிரபாஸின் பவுஸி | வாரணாசி பட வில்லன் பிருத்விராஜ் ஹாலிவுட் பட பாதிப்பா? | விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்? | விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு | ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? | ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் |

கார்த்தி
நடிப்பில் அடுத்ததாக வெளியாகும் விதமாக தயாராகி வரும் படம் 'வா
வாத்தியார்'. நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை
ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார். இந்த படத்தில்
கதாநாயகியாக கிர்த்தி ஷெட்டி நடிக்க, ராஜ்கிரண், சத்யராஜ் முக்கிய
வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படம் டிசம்பர் 5ம் தேதி வெளியிட
திட்டமிடப்பட்டு அதற்கான வேலைகள் நடைபெற்று வந்தாலும் இன்னும் ரிலீஸுக்கு
15 நாட்களே இருக்கும் நிலையில் இந்தப்படம் வெளியாகுமா என்கிற சந்தேகம்
ஏற்பட்டுள்ளது.
தற்போது இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று
வரும் நிலையில் 15 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற வேண்டி இருக்கிறது என்று
சொல்லப்பட்டது. ஆனால் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, நலன் குமாரசாமியிடம் 15
நாட்கள் எல்லாம் கொடுக்க முடியாது, ஐந்து நாட்களிலேயே படத்தை முடித்துக்
கொடுங்கள். டிசம்பர் 5ல் நான் படத்தை ரிலீஸ் செய்தாக வேண்டும் என
கண்டிப்பாக கூறிவிட்டாராம்.
அதற்கு காரணம் இந்த படத்தின் ரிலீஸ்
தேதியை மையமாக வைத்து இதன் ஓடிடி விற்பனையையும் ஏற்கனவே நல்ல விலைக்கு அவர்
பேசி முடித்து விட்டார் என்பதால் டிசம்பர் 5ல் இந்த படத்தை எப்படியும்
வெளியிட்டாக வேண்டிய கட்டாயத்தில் ஞானவேல் ராஜா இருக்கிறாராம்.. அதனால் வா
வாத்தியார் சொன்ன தேதியில் வெளிவருவார் என எதிர்பார்க்கலாம்.