விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்? | விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு | ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? | ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் | 'வாரணாசி' முன்னோட்ட வரவேற்பு: ராஜமவுலியின் நன்றி | மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! |

மலையாளத்தில் கடந்த வாரம் மம்முட்டி நடித்த டர்போ மற்றும் பிஜூமேனன், ஆசிப் அலி நடித்த தலவன் ஆகிய படங்கள் வெளியாகின. இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளன. இதில் டர்போ படத்தில் மம்முட்டிக்கு கடைசி வரை உதவி செய்யும் ஒரு தொழிலதிபர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மலையாள சினிமாவின் பிரபல இயக்குனரும், நடிகருமான திலீஷ் போத்தன். அதேபோல தலவன் படத்திலும் பிஜூமேனனுக்கு உதவி செய்யும் உயர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் திலீஷ் போத்தன். இந்த இரண்டு படங்களுக்குமே அடுத்ததாக இன்னொரு பாகமும் இருக்கிறது என்பது போல லீட் கொடுத்து கிளைமாக்ஸ் முடிந்திருந்தன.
இதில் ஆச்சரியமாக இந்த இரண்டு படங்களின் கிளைமாக்ஸ் காட்சியும் முடியும்போது ரசிகர்கள் யாரும் எதிர்பாராத விதமாக திலீஷ் போத்தன் எதிரிகளால் கொல்லப்பட்டு படத்தின் ஹீரோக்களுக்கு அதிர்ச்சி கொடுப்பதாக முடிவடைந்து இருந்தது. சொல்லப்போனால் இந்த இரண்டு படத்தின் கடைசி ஷாட்டுகளும் திலீஷ் போத்தனின் டெட் பாடியாகத்தான் காட்டப்பட்டன. இப்படி ஒரே நாளில் வெளியான 2 படங்களில் திலீஷ் போத்தனை மையப்படுத்தி கிளைமாக்ஸ் காட்சி நிறைவு செய்யப்பட்டிருந்தது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.