சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

கடந்த சில நாட்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான ககனாச்சாரி திரைப்படம் வெளியான ஒரு வாரத்திலேயே அதன் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு ஆச்சரியப்படுத்தினார்கள். இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பிஜூமேனன், ஆசிப் அலி நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற தலவன் படத்திற்கும், அதன் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது என இந்தப் படத்தின் 65-வது நாள் வெற்றி விழாவில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஜன கன மன படத்தின் மூலம் போலி என்கவுன்டரை வெளிச்சம் போட்டு காட்டி பரபரப்பை ஏற்படுத்திய இயக்குனர் ஜிஸ் ஜாய் தான் இந்த படத்தை இயக்கியிருந்தார். காவல்துறையில் ஒரே ஸ்டேஷனில் சம அந்தஸ்தில் இருக்கும் இரண்டு அதிகாரிகளுக்கு ஏற்படும் ஈகோ மோதலும் அதனை தொடர்ந்து நடக்கும் சம்பவங்களையும் மையப்படுத்தி எதிர்பாராத கோணத்தில் ஒரு புலனாய்வு படமாக கொடுத்திருந்தார். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் டீசன்ட்டான வசூலையும் பெற்றதைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் அறிவிக்கப்பட்டுள்ளது.